கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படு கிறார்கள்.
பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படு கிறார்கள்.
பெண் மீது ஆசிட் வீச்சு
கோவை கோர்ட்டுக்கு ஆஜராக வந்த பிரபல ரவுடி கோகுல் கடந்த மாதம் 13-ந் தேதி 5 பேர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கோவை கோர்ட்டு வளாகத்தில் உள்ள 6 நுழைவு வாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த கவிதா என்ற பெண் மீது அவரது கணவர் சிவா ஆசிட் வீசினார். இதில் கவிதா படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் கோவை கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுமக்களிடம் விசாரணை
இதையடுத்து கோவை கோர்ட்டு வளாக நுழைவு வாயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள் 4-ம் எண் நுழைவாயில் வழியாக மட்டும் நேற்று முதல் உள்ளே மற்றும் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக அந்த நுழைவு வாயிலுக்கு வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தி எதற்காக வருகிறார்கள். என்ன கார ணம் என்று விசாரித்தனர். மேலும் பொதுமக்களின் உடைமைக ளை சோதனை செய்த பிறகே கோர்ட்டு வளாகத்துக்குள் செல்ல பொதுமக்களை போலீசார் அனுமதித்தனர்.
அனுமதி இல்லை
அதோடு பொதுமக்கள் கொண்டுவரும் தண்ணீர் பாட்டில்களை போலீசார் குடித்து சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். இது போல் கோர்ட்டின் மற்ற 5 நுழைவுவாயில் களிலும் போலீசார் பாதகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்கள் வரும் பொது கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டனர். வேறு யாரையும் அந்த நுழைவுவாயில்கள் வழியாக அனுமதிக்க வில்லை.
கோர்ட்டு வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவர், பாதுகாப்பு தொடர்பாக போலீசாருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.
கோர்ட்டு வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதை வக்கீல்கள் வரவேற்று உள்ளனர்.






