குடியரசு தின விழாவையொட்டி அரியலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


குடியரசு தின விழாவையொட்டி அரியலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 26 Jan 2023 12:00 AM IST (Updated: 25 Jan 2023 11:41 PM IST)
t-max-icont-min-icon

குடியரசு தின விழாவையொட்டி அரியலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அரியலூர்

குடியரசு தின விழா

இந்திய குடியரசு தினவிழா இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி காலை 8.05 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

இதையொட்டி அரியலூரில் போலீசார் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நேற்று ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டத்தில் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

வாகன சோதனை

மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளில் இரவு, பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதுபோல் வழிபாட்டு தலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டங்களில் வெடிகுண்டுகளை கண்டறியும் சிறப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலமும், மோப்ப நாய் உதவியுடனும் தீவிர சோதனை நடத்தினர்.

இதேபோல் அரியலூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், ரெயில்வே போலீசாரும் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் கடும் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது.


Next Story