சிங்கம்புணரி பகுதியில் கனமழை


சிங்கம்புணரி பகுதியில் கனமழை
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி பகுதியில் கனமழை பெய்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி பகுதி விவசாயம் சார்ந்த பகுதி. இந்த பகுதியில் மழை நீரை நம்பி அதிகப்படியான விவசாய நிலங்களில் விவசாயங்கள் நடைபெறுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் கண்மாய்களில் தண்ணீர் வற்றிய நிலையில் ஆங்காங்கே மீன்பிடி திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் சிங்கம்புணரி பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் இந்த மழை நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இரவு நேரத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story