அறுவடைக்கு தயாராக இருந்த ெநற்பயிர்கள் சேதம்


அறுவடைக்கு தயாராக இருந்த ெநற்பயிர்கள் சேதம்
x

மணல்மேடு அருகே பலத்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் ேசதம் அடைந்தன.

மயிலாடுதுறை

மணல்மேடு;

மணல்மேடு அருகே பலத்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் ேசதம் அடைந்தன.

குறுவை சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு, வில்லியநல்லூர், கொற்கை, தலைஞாயிறு, மண்ணிப்பள்ளம், கிழாய், திருவாளப்புத்தூர், பட்டவர்த்தி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், குறுவை நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் குறுவை நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. சில பகுதிகளில் முன்பே சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அறுவடையும் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் கவலை

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வில்லியநல்லூர், கிழாய் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளது.இதன் காரணமாக விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் கவலை அடைந்துள்ளனர்.தற்போது பெய்த மழையால் வயல்களில் தேங்கிய மழைநீரில் பயிர்கள் கிடந்தால் நெற்பயிர்கள் முளைத்துவிடுமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.எனவே கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story