போடியில் 1 மணி நேரம் பலத்த மழை


போடியில் 1 மணி நேரம் பலத்த மழை
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போடியில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

தேனி

போடி மற்றும் அதனை சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மலைப் பகுதிகளான குரங்கணி, பிச்சாங்கரை, மேலப்பரவு, சிறைக்காடு, மரிமூர் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலையிலும் மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை பலத்த மழையாக மாறியது. சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story