அரியலூரில் 2-வது நாளாக கனமழை


அரியலூரில் 2-வது நாளாக கனமழை
x

அரியலூரில் 2-வது நாளாக கனமழை பெய்தது.

அரியலூர்

அரியலூரில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் பெய்த மழை இரவு 8.30 மணியளவில் கனமழையாக பெய்தது. இந்தநிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் அரியலூர் நகரை கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து சிறிது நேரத்தில் கனமழை பெய்யத்தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் விடாமல் பெய்த இந்த மழையால் சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றதை காண முடிந்தது. திடீரென பெய்த இந்த மழையால் சாலையோரம் கடைகள் அமைத்திருந்த வியாபாரிகள் அவதியடைந்தனர். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 More update

Related Tags :
Next Story