போளூர் பகுதியில் பலத்த மழை


போளூர் பகுதியில் பலத்த மழை
x

போளூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மஞ்சள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சுற்றியுள்ள மாம்பட்டு, அத்திமூர், ஜடாதாரி குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதேபோல் ஜவ்வாது மலையில் பெய்த மழையினால் ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் மஞ்சள் ஆற்றில் திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story