பேரையூர் பகுதியில் பலத்த மழை


பேரையூர் பகுதியில் பலத்த மழை
x

பேரையூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

மதுரை

பேரையூர்

பேரையூர் பகுதியில் கடந்த 15 நாட்களாக கடுமையான வெப்பம் கொளுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியிலிருந்து பேரையூர், மங்கல்ரேவ், கோட்டைப்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, அத்திபட்டி, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 2 மணி நேரம் பெய்த இந்த மழை மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிருக்கு ஏற்றது என்று விவசாயிகள் கூறினார்கள். மேலும் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.


Related Tags :
Next Story