சென்னையில் அதிகாலையில் கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் அதிகாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது. கோயம்பேடு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, தி.நகர், கே.கே.நகர். அண்ணா சாலை, திருமங்கலம், திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், பெரம்பூர், ஓட்டேரி, புரசைவாக்கம் என பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, போரூர், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், திருவேற்காடு, வேலப்பன்சாவடி, குமணன்சாவடி, மாங்காடு, மௌலிவாக்கம், முகலிவாக்கம், கோவூர் ,குன்றத்தூர், கரையான்சாவடி, நசரத்பேட்டை, திருமழிசை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.
அதே போல் புறநகர் பகுதிகளான ஒட்டியுள்ள பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை தாம்பரம், நெற்குன்றம், கோயம்பேடு, மதுரவாயல், ஆலப்பாக்கம், ஆழ்வார் திருநககர்,வானகரம், பம்மல், மேடவாக்கம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி காட்சியளிக்கிறது.