கொடைக்கானலில் சாரல் மழை


கொடைக்கானலில் சாரல் மழை
x

கொடைக்கானலில் பெய்த சாரல் மழையால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கேரளாவை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கொடைக்கானல் மேல்மலை மற்றும் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவி வருகிறது.

இந்தநிலையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் மேல்மலை பகுதியில் உள்ள மன்னவனூர் ஏரி, கூக்கால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது அந்த ஏரிகள் நிரம்பி வழிகிறது. மேலும் மேல்மலையில் உள்ள தூத்தூர் அருவி, பழம்புத்தூர் அருவி, பள்ளங்கி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக பழம்புத்தூர் அருவியில் வெள்ளியை உருக்கிவிட்டது போன்று தண்ணீர் வழிந்தோடுகிறது. கொடைக்கானலில் நேற்று பகல் நேரத்தில் மேகமூட்டங்கள் தரையிறங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளித்தது. இதனை பலரும் பார்த்து ரசித்தனர்.


Next Story