கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழையால் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர்.
திண்டுக்கல்
கொடைக்கானல் பகுதியில், கடந்த சில மாதங்களாக அவ்வப்போது கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரில் உள்ள நட்சத்திர ஏரி மற்றும் பல்வேறு அணைகளும் நிரம்பி வழிகின்றன. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்திருந்த நிலையில், நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை பலத்த மழை கொட்டித்தீர்த்தது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.
மழை எதிரொலியாக, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலா இடங்களை பார்க்க முடியாமல் பயணிகள் பரிதவித்தனர். மழை, பலத்த காற்று காரணமாக நட்சத்திர ஏரியில் பிற்பகல் முதல் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. மழை குறைந்த நிலையில் 4 மணி முதல் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது. செண்பகனூர் பகுதியில், தரை இறங்கிய மேககூட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
Related Tags :
Next Story