நொய்யல்-அரவக்குறிச்சி பகுதிகளில் பலத்த மழை


நொய்யல்-அரவக்குறிச்சி பகுதிகளில் பலத்த மழை
x

நொய்யல்-அரவக்குறிச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. இந்தநிலையில் மதியம் 2 மணியில் இருந்து நொய்யல், முத்தனூர், சேமங்கி, மரவாபாளையம், குளத்துப்பாளையம், குந்தாணிபாளையம், வேட்டமங்கலம், தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர், திருக்காடுதுறை, நத்தமேடு, நடையனூர், கோம்புப்பாளையம், பேச்சிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதேபோல் அரவக்குறிச்சி, பள்ளபட்டி, மலைக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்தது குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 More update

Related Tags :
Next Story