நொய்யல் பகுதியில் கனமழை
நொய்யல் பகுதியில் கனமழை பெய்தது.
கரூர்
நொய்யல், மரவாபாளையம், குறுக்குச்சாலை, நத்தமேடு, குந்தாணி பாளையம், புன்னம் சத்திரம், புன்னம், திருக்காடுதுறை, பாலத்துறை, நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி இருந்து பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணியில் இருந்து மீண்டும் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல் கரும்பு, வாழை, வெற்றிலை, நெல் உள்ளிட்ட பயிரிடப்பட்டிருந்த வயல்களின் மழைநீர் நிரம்பி வரப்புகள் வழிந்து வெளியேறி வருகிறது. மேலும் வற்றிய கிணறுகளில் நீரூற்று எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழையால் வாகன ஓட்டிகள், சாலையோர கடைக்காரர்கள் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story