ஊட்டியில் பலத்த மழை


ஊட்டியில் பலத்த மழை
x

ஊட்டியில் பலத்த மழை செய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் பலத்த மழை செய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தென்மேற்கு பருவமழை

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும்.

இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டம் உள்பட தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் வலிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இன்று காலை முதல் நன்றாக வெயில் அடித்த நிலையில், மதியம் 12 மணி முதல் வானம் மேக மூட்டத்துடன், மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. இதையடுத்து மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

சாலைகளில் தேங்கிய மழைநீர்

இதனால் பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் வழி, லவ்டேல் சந்திப்பு உள்பட பல்வேறு சாலைகளில் சாலைகளில் மழைநீர் சென்று தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதேபோல் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது மேலும் தேயிலை தோட்டங்கள். பசுமையாக காட்சியளிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீலகிரியில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- ஊட்டி -10, நடுவட்டம்- 5, உலிக்கல்- 38, கீழ் கோத்தகிரி -18, தேவாலா- 15, பந்தலூர்- 34, சேரங்கோடு- 50.


Next Story