பேச்சிப்பாறை பகுதிகளில் கனமழை திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
பேச்சிப்பாறை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குலசேகரம்:
பேச்சிப்பாறை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கனமழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இடை இடையே பலத்த மழை பெய்தது.
இந்தநிலையில் பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு மற்றும் நீர்வரத்து பகுதிகளான கீழ் கோதையாறு, மோதிரமலை, மாங்காமலை, கிளவியாறு, குற்றியாறு ஆகிய பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு உள்வரத்து தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது. மேலும் குலசேகரம், பொன்மனை, திருந்திக்கரை, செருப்பாலூர், மலைவிளை, அண்டூர் உள்ளிட்டப் பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல இடங்களில் சாரல் மழை பெய்தது.
அருவிக்கு தண்ணீர் வரத்து
மழையின் காரணமாக கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் கடந்த 2 நாட்களாக அதிகளவு தண்ணீர் கொட்டுகிறது.
தொடர் மழையின் காரணமாக குளுமையான சீசன் நிலவுகிறது.