பெரம்பலூரில் பலத்த மழை


பெரம்பலூரில் பலத்த மழை
x

பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.

பெரம்பலூர்

பலத்த மழை

பெரம்பலூரில் நேற்று காலை முதல் மதியம் 12 மணி வரை வெயில் அடித்தது. பின்னர் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. மதியம் சுமார் 1 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு கொட்டித்தீர்த்தது. இதைத்தொடர்ந்து சற்று இடைவெளிவிட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் பெய்யத்தொடங்கிய மழை தொடர்ந்து பெய்தவாறு இருந்தது.

இதனால் பெரம்பலூரில் பாலக்கரை, மூன்று ரோடு, நகராட்சி அலுவலக வளாகம், ரோவர் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, மாவட்ட விளையாட்டு மைதான சாலை, ஒருங்கிணைந்த கோர்ட்டின் பின்பகுதி ஆகிய இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும், கார், ஆட்டோ போன்ற வாகனங்களில் சென்றவர்களும், குடைபிடித்து நடந்து சென்ற பொதுமக்களும் பாதிப்பிற்கு உள்ளாகினர்.

மாணவ-மாணவிகள்...

மாலையில் பள்ளிகள் நிறைவடையும் நேரத்தில் மழை தொடர்ந்து பெய்ததால், மாணவ-மாணவிகள் பலர் மழையில் நனைந்து கொண்டே வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோல் மாவட்ட பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது.


Related Tags :
Next Story