சிவகிரி பகுதியில் பலத்த மழை


சிவகிரி பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 13 Oct 2023 12:30 AM IST (Updated: 13 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி பகுதியில் பலத்த மழை பெய்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள சுனைப்பாறை பகுதி, தலையணை, கோம்பையாற்று பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரமான விஸ்வநாதபேரி, ராயகிரி, உள்ளார், தளவாய்புரம், சொக்கநாதன் புத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சுமார் 2 மணி நேரத்திற்கு நீடித்த இந்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story