ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் பலத்த மழை
ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை, கரிசல்பட்டி, இ.எல். ரெட்டியாபட்டி, ஊத்துப்பட்டி, பாண்டியாபுரம், கீழச்செல்லையாபுரம், கோவில் செல்லையாபுரம், சிவசங்கு பட்டி, சேர்வைக்காரன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. 1½ மணி நேரம் பெய்த மழையினால் தெருக்களில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீர், மழை நீருடன் பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழாயிரம்பண்ணை துணை மின் நிலையத்திலிருந்து மின்தடை செய்யப்பட்டது. திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story