வால்பாறையில் கனமழை
வால்பாறையில் கனமழை
வால்பாறை
வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் ஒரு வாரம் மட்டுமே லேசான மழை பெய்தது. அதன்பிறகு மழை பெய்யவில்லை. இதனால் கடுமையான வறட்சி நிலவியது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஆகஸ்டு மாதத்தில் கொட்டித்தீர்த்து, நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும். ஆனால் இந்த ஆண்டு மழை சரிவர பெய்யவில்லை.
ஆனாலும், கடந்த 3 நாட்களாக வால்பாறையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கும், அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிந்தது. மேலும் இறைச்சல்பாறை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வால்பாறையில் 15 மி.மீ. மழையும், நீராரில் 15 மி.மீ. மழையும், அதிகபட்சமாக மேல்நீராறில் 73 மி.மீ. மழையும் பெய்துள்ளது.