வால்பாறையில் கனமழை


வால்பாறையில் கனமழை
x

வால்பாறையில் கனமழை

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை பெய்து வந்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு பிறகு வால்பாறையில் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதனால் வால்பாறை மெயின் ரோடு, நகராட்சி மார்க்கெட் பகுதி, நடைபாதை பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது.

மேலும் சாலையோரங்களில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். தொடர்ந்து மலை வரை சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. சோலையார் அணை நேற்று காலை 6 மணி நிலவரப்படி 159 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1149 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1457 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story