வால்பாறையில் பலத்த மழை


வால்பாறையில் பலத்த மழை
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பலத்த மழை

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கோடைமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை 1½ மணி நேரம் வால்பாறை பகுதி முழுவதும் பலத்த மழை பெய்தது சுற்றுலா பயணிகள் வர தொடங்கி விட்ட நிலையில், இந்த கோடை மழை அவர்களை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது. மழை காரணமாக வால்பாறை பகுதி முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. காலை முதல் கடுமையான வெயிலும், மதியத்திற்கு பிறகு மழையும் பெய்து வருவதால், பச்சை தேயிலை விளைச்சலும் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story