வேலாயுதம்பாளையம்-நொய்யல் பகுதிகளில் கனமழை
வேலாயுதம்பாளையம்-நொய்யல் பகுதிகளில் கனமழை பெய்தது.
நொய்யல், மரவாபாளையம், புன்னம் சத்திரம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்ேவறு பகுதிகளில் ேநற்று இரவு 9 மணியில் இருந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வேலை முடிந்து இருசக்கர வாகனங்களில் வீடு திரும்பியவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். அதேபோல் சலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இந்நிலையில் கனமழையின் காரணமாக பயிர்கள் செழித்து வளரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும் கனமழை பெய்தது. இந்தநிலையில் நேற்று காலை முதலே வேலாயுதம்பாளையம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆகிய பகுதிகளில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை ஒரு மணி நேரம் இடைவிடாமல் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.