வேலூர், ஒடுகத்தூர் பகுதிகளில் பலத்த மழை


வேலூர், ஒடுகத்தூர் பகுதிகளில் பலத்த மழை
x

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது.

வேலூர்

பலத்த மழை

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்தை விட கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. வாட்டி வதைத்த வெயிலால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. விவசாயிகள் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். நன்கு வளர்ந்துள்ள நிலக்கடலை பயிர்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிய நிலையில் இருந்தது. இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது. இதனால், கருகிய பயிர்கள் புத்துயிர் பெறும்நிலை ஏற்பட்டுள்ளது.

67.20 மில்லி மீட்டர்

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னையில் 67.20 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோன்று மாவட்டத்தின் பிறபகுதிகளில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

குடியாத்தம்-34, வேலூர் மற்றும் காட்பாடி-32, மேல்ஆலத்தூர்-30.20, விரிஞ்சிபுரம்-26.80, வேலூர் சர்க்கரை ஆலை-23.60.

இந்த நிலையில் வேலூரில் நேற்று மதியம் முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசியது. அதனால் குளிர்ச்சியான நிலை காணப்பட்டது.


Next Story