உடையார்பாளையத்தில் பலத்த மழை


உடையார்பாளையத்தில் பலத்த மழை
x

உடையார்பாளையத்தில் பலத்த மழை பெய்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து கருமேகம் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் பலத்த மழை பெய்தது. இந்த மழை உடையார்பாளையம், முணியத்தரியான்பட்டி, கழுமங்கலம், கச்சிப்பெருமாள், துலாராங்குறிச்சி, சூரியமணல், சூசையப்பர்பட்டிணம், இடையார், ஏந்தல், வாணத்தரியான்பட்டிணம், சோழங்குறிச்சி, தத்தனூர், மனகெதி, நாச்சியார்பேட்டை, வெண்மான்கொண்டான், சுத்தமல்லி, உல்லியகுடி, பருக்கல், உள்ளிட்ட கிராமங்களில் பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story