தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும், கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து வெளுத்து வாங்கிவருகிறது. இதனால் வீடுகளுக்குள்மழை நீர் புகுந்தது.

இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (17.10.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,தேனி, மதுரை, திருப்பூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவித்துள்ளது.


Next Story