அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 4 Nov 2023 6:34 AM IST (Updated: 4 Nov 2023 7:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழையும் பெய்து வருகிறது. இதனிடையே வானிலை மையம் சார்பில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story