சென்னையில் மீண்டும் தொடங்கிய கனமழை


சென்னையில் மீண்டும் தொடங்கிய கனமழை
x
தினத்தந்தி 10 Nov 2022 6:46 PM IST (Updated: 10 Nov 2022 6:46 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், பெரியமேடு, எழும்பூர், கோடம்பாக்கம், மாம்பலம், கோட்டூர்புரம், திருவல்லிக்கேணி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவர்களும், வாகன ஓட்டிகளும் சற்று சிரமமடைந்துள்ளனர்.


Next Story