கனமழை எச்சரிக்கை - தலைமை செயலாளர் உடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆலோசனை


கனமழை எச்சரிக்கை - தலைமை செயலாளர் உடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆலோசனை
x

கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தலைமை செயலாளர் உடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், தமிழகத்தில் வரும் 8ம் தேதி மாலை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் இறையன்பு உடன், தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார்.

புயல் எச்சரிக்கையையடுத்து எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளருடன் ஆலோசித்ததாக பாலசந்திரன் பேட்டி அளித்துள்ளார்.


Next Story