அத்தனூர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை


அத்தனூர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை
x

அத்தனூர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் மரம் சாய்ந்து விழுந்து 2 வீடுகள் சேதமாகின.

நாமக்கல்

மழை அளவு

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மங்களபுரம் பகுதியில் அதிகபட்சமாக 39 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

ராசிபுரம்-32, கலெக்டர் அலுவலகம்-31, புதுச்சத்திரம்-12, கொல்லிமலை-10, திருச்செங்கோடு-9, எருமப்பட்டி-8, நாமக்கல்-7, சேந்தமங்கலம்-6, மோகனூர்-5, பரமத்திவேலூர்-4, குமாரபாளையம்-2. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 165 மி.மீட்டர் ஆகும்.

2 வீடுகள் சேதம்

வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர், ஆலம்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் அத்தனூர், ஆலம்பட்டி பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

அப்போது அத்தனூர் பகுதியில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து அருகே இருந்த வீடுகளில் விழுந்தது. இதில் 2 வீடுகள் சேதமாகின. மேலும் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் ஏற்படவில்லை. இதுகுறித்து மின்சாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்சார ஊழியா்கள் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் எந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டது.


Next Story