பலத்த காற்றுடன் கனமழை
பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கன மழை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை வெயில் அதிக அளவு காணப்பட்டது. இதனால் வெப்பம் அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. சாலையோர கடைகளில் உள்ள கூரைகள் காற்றில் பறந்தன. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டு கன மழை பெய்தது. ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அரிமளம், கே.புதுப்பட்டி, கீழாநிலைக்கோட்டை, நெடுங்குடி, வாளரமாணிக்கம், கும்மங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.