சோழவந்தான் அருகே பலத்த காற்றுடன் கனமழை - வீட்டின் மீது மரம் விழுந்தது


சோழவந்தான் அருகே  பலத்த காற்றுடன் கனமழை - வீட்டின் மீது மரம் விழுந்தது
x

சோழவந்தான் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வீட்டின் மீது மரம் விழுந்தது

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்பட்டி கிராமத்தில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் 50 வருடத்திற்கு மேலான புளியமரம் வேரோடு சாய்ந்தது. அருகில் உள்ள மின் கம்பம் மற்றும் ஓட்டு வீட்டில் மரம் விழுந்தது. இதில் மின்கம்பம் மற்றும் ஓட்டு வீடு சேதம் அடைந்தது. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் அறிந்து வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆல்பர்ட் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று புளிய மரத்தை அகற்றினர்.


Related Tags :
Next Story