இடி, மின்னலுடன் பலத்த மழை
திருக்கோவிலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் பகுதியில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. பின்னர் மிதமான மழை பெய்தது. மாலை 5 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கியது. இந்த மழை திருக்கோவிலூர் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின்போது திருக்கோவிலூர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழை நின்ற பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதால் நிம்மதி அடைந்தனர்.