இடி- மின்னலுடன் பலத்த மழை
விழுப்புரம் பகுதியில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
விழுப்புரம்
விழுப்புரம்,
விழுப்புரம் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று காலையில் வானம் மேக மூட்டத்துடனும், மப்பும் மந்தாரமுமாகவும் காட்சியளித்தது. பிறகு சாரல்மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் 45 நிமிடத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகும் விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. விழுப்புரத்தில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் சென்றதை காணமுடிந்தது. தொடர் மழையால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story