இடி, மின்னலுடன் பலத்த மழை
விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று காலை விழுப்புரத்தில் வெயில் அடிக்க தொடங்கியது. பின்னர் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 4 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் ½ மணி நேரம் பெய்தது. மழையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் குளம்போல் தேங்கி நின்றது. இதேபோல் விழுப்புரத்தை சுற்றியுள்ள கிராம புறங்களிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.