சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை


சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை
x
தினத்தந்தி 22 Jun 2023 3:34 PM IST (Updated: 22 Jun 2023 4:27 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடாமல் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. நேற்று இரவு ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தற்போது காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மெரினா கடற்கரை, எழும்பூர், சிந்தாரிபேட்டை, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கிண்டி, ஆவடி, வேளச்சேரி, தி நகர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்யும் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story