நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை


நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை
x

நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

நெல்லை,

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


Next Story