சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை


சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை
x
தினத்தந்தி 28 Sept 2022 3:06 PM IST (Updated: 28 Sept 2022 3:07 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனழை பெய்து வருகிறது.கோடம்பாக்கம்,வடபழனி, அண்ணாநகர்,எழும்பூர், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், கோவர்த்தகிரி, பருத்திப்பட்டு, அசோக் நகர், மாம்பலம், செங்குன்றம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.


Next Story