காற்றுடன் பலத்த மழை; வாழைகள் சாய்ந்தன


காற்றுடன் பலத்த மழை; வாழைகள் சாய்ந்தன
x

காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வாழைகள் சாய்ந்தன.

திருச்சி

தொட்டியம்:

தொட்டியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏரிகுளம், சித்தூர், சீனிவாசநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை, கொடிக்கால் பயிர்களை பயிரிட்டு இருந்தனர். இதில் ரஸ்தாலி, பூவன், கற்பூரவள்ளி, ஏலரசி போன்ற வகைகளில் வாழைகளை பயிரிட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 10 மணி வரை தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் காற்றில் சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story