துறையூரில் பலத்த மழை: கீரம்பூர் கிராமத்தில் 50 வீடுகளில் நீர் புகுந்தது


துறையூரில் பலத்த மழை: கீரம்பூர் கிராமத்தில் 50 வீடுகளில் நீர் புகுந்தது
x

துறையூரில் பலத்த மழை பெய்த நிலையில் கீரம்பூர் கிராமத்தில் 50 வீடுகளில் மழைநீர் புகுந்தது.

திருச்சி

துறையூர்:

மழைநீர் புகுந்தது

துறையூரில் நேற்று காலை முதல் அதிக அளவில் வெயில் சுட்டெரித்தது. வெப்ப காற்றும் வீசியது. இந்நிலையில் திடீெரன வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இரவு சுமார் 7 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் விடாமல் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் துறையூரை அடுத்துள்ள கீரம்பூர் வடக்கு தெருவில் உள்ள50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

இதனால் அந்த வீடுகளை ேசர்ந்த பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகினர். மேலும் வீடுகளில் இருந்து தண்ணீரை மொண்டு வெளியே ஊற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு போதுமான வடிகால் வசதி இல்லை. இதனால் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது, இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கோரிக்கை

மேலும் அதிக அளவில் பூச்சிகள், வண்டுகள், பாம்புகள் தவளை போன்ற உயிரினங்கள் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு பொதுமக்களாகிய நாங்கள் அவதிப்படுகிறோம். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், கட்டமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story