ஈரோட்டில் கொட்டித் தீர்த்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் மக்கள் அவதி...!


ஈரோட்டில் கொட்டித் தீர்த்த கனமழை - வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரால் மக்கள் அவதி...!
x

ஈரோட்டில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் நேற்று பகல் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. அதைத்தொடர்ந்து மாலையில் வானில் கரு மேகங்கள் திரண்டன. இரவு 8.30 மணிக்கு இடி -மின்னலுடன் சாரல் மழை பெய்யத்தொடங்கியது.

இந்த மழை சிறிது நேரத்தில் வலுப்பெற்று இரவு 10.15 மணி வரை பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. அதன் பின்னரும் மழை தூறிக்கொண்டே இருந்தது.

இதனால் ஈரோடு பஸ் நிலையம், முனிசிபல் காலனி, பெருந்துறை ரோடு, பெரியவலசு, வீரப்பன்சத்திரம், மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஈ.வி.என். ரோடு, கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ரோட்டில் ஓடியது.

இந்த நிலையில் ஈரோட்டில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை மல்லி நகரில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.ர்.


Next Story