மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்


மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்
x

மாமல்லபுரத்தில் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.

மாமல்லபுரம்,

யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்கிறது, மாமல்லபுரம். இங்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் கடற்கரை மணல் வெளிபரப்பில் பொழுதை போக்குவர். கடலில் குளித்து மகிழ்ச்சியில் ஈடுபடுவதும் உண்டு.

மாமல்லபுரத்தில் எப்போதும் இல்லாத வகையில் நேற்று கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் குடியிருப்புகள் வரை 10 மீட்டர் தூரத்துக்கு சீறி பாய்ந்து முன்னோக்கி வந்தன. அதனால் நேற்று கரைப்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு காணப்பட்டது.

கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் முன்னோக்கி வந்து மணற்பரப்பை ஆக்கிரமித்து விட்டதால் படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் பெரும்பாலான மீனவர்கள் பரிதவித்தனர். ஒரு சிலர் தங்களுக்கு செர்ந்தமான இடங்களுக்கு கொண்டு போய் படகுகளை பாதுகாப்பாக வைத்தனர்.

பலத்த கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. கரைப்பகுதியும் கடல் நீரால் சூழப்பட்டு மணற்பரப்பு முழுவதும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதால் வழக்கம்போல் வலை பின்னும் பணியில் ஈடுபடும் மீனவர்கள் அந்த பணியில் ஈடுபட முடியாமல் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர்.

தூண்டில் வளைவுகள்

மேலும் பலத்த கடல் சீற்றம் காரணமாக ஞாயிற்றுகிழமை தோறும் சூரிய குளியலில் ஈடுபடும் சுற்றுலா பயணிகளையும் கடற்கரை பகுதியில் காணமுடியவில்லை. கடற்கரை உணவங்கள் வரை கடல் அலை முன்னோக்கி வந்துவிட்டதால், கடல் அரிப்பில் அவை பாதிக்காத வண்ணம் அதன் உரிமையாளர்கள் பலர் பாறை கற்கள் கொட்டி உணவகங்களையும், குடியிருப்புகளையும் பாதுகாத்து வருகின்றனர்.

மேலும் கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம் மீனவர் பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது என்றும், கடல் சீற்றம் ஏற்படாத வகையில் தமிழக அரசு கரைப்பகுதியில் தூண்டில் வளைவுகளை அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story