மீன்சுருட்டியில் கடும் பனிப்பொழிவு


மீன்சுருட்டியில் கடும் பனிப்பொழிவு
x
தினத்தந்தி 9 Feb 2023 12:32 AM IST (Updated: 9 Feb 2023 12:41 AM IST)
t-max-icont-min-icon

மீன்சுருட்டியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் நேற்று அதிகாலை முதல் காலை 8 மணி வரை கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது. மேலும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு பனிமூட்டம் நிலவியது. கடுங்குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. எதிரே வந்த வாகனங்கள் சரிவர தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் விவசாய பணிகள் காலை 9 மணிக்கு மேல் தான் நடைபெற்றது.


Next Story