நொய்யல் பகுதியில் கடும் பனிப்பொழிவு


நொய்யல் பகுதியில் கடும் பனிப்பொழிவு
x

நொய்யல் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கரூர்

கடும் பனிப்பொழிவு

கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர், கட்டிப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடு, கரைப்பாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், புன்னம் சத்திரம், புன்னம், பழமாபுரம், கோம்புப்பாளையம், முத்தனூர், சேமங்கி, மரவாபாளையம், நொய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

இந்த பனிப்பொழிவால் சாலைகள் மறைக்கப்பட்டிருந்தது. விவசாய பயிர்களும் வெளியில் தெரியாமல் பனியால் மூடப்பட்டிருந்தது. இதனால் விவசாயிகள் தங்களது விவசாய தோட்டத்திற்கு செல்லும் போது அதிக பனிப்பொழிவின் காரணமாக சிரமப்பட்டு சென்றனர்.

வாகன ஓட்டிகள் அவதி

அதேபோல் பனி காரணமாக அதிக குளிர் ஏற்பட்டது. அதிகாலையில் கூலி வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும்போது கடும் பனிகாரணமாக தங்களது உடலை வருத்திக் கொண்டு அவதிப்பட்டு சென்றனர்.

சாலைகளில் செல்லும் வாகனங்கள் தெரியாததால் விளக்குகளை எரிய விட்டு சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.


Next Story