குற்றாலத்தில் கடும் வெயில்


குற்றாலத்தில் கடும் வெயில்
x

குற்றாலத்தில் கடும் வெயில் அடித்தது.

தென்காசி

தென்காசி:

குற்றாலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அருவிகளில் தண்ணீர் கொட்டியது. அதன்பிறகு மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீர் குறைந்தது. நேற்று குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் அடித்தது.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி சில இடங்களில் பெய்து வருகிறது. ஆனால் குற்றாலத்தில் மழை இல்லை காற்று மட்டும் வேகமாக வீசுகிறது. மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீர் மேலும் குறைந்துள்ளது. இதனால் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


Next Story