திருச்சியில் ஹலோ எப்.எம். கொண்டாடிய கேக் திருவிழா


திருச்சியில் ஹலோ எப்.எம். கொண்டாடிய கேக் திருவிழா
x

திருச்சியில் ஹலோ எப்.எம். சார்பில் கேக் திருவிழா கொண்டாடப்பட்டது.

திருச்சி

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பெண்கள் மட்டும் பங்கு பெறக்கூடிய வகையில், திருச்சி சாரதாஸ் வழங்கும் ஹலோ எப்.எம். கேக் திருவிழாவின் பிரமாண்டமான இறுதிப்போட்டி, நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் சுற்றில், நடுவராக செயல்பட்ட கேக் பீ பேஸ்ட்ரி செப் உடன் இணைந்து ஹலோ எப்.எம். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், கேக் பேக்கிங் மற்றும் கேக் அலங்கரிப்பது போன்ற இரண்டு போட்டிக்காக, திருச்சி முழுவதிலுமிருந்து பதிவு செய்தவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, போட்டியில் கலந்துகொண்ட பெண்களின் கேக் செய்யும் முறை, ருசி, கற்பனைத்திறன் போன்றவற்றை கணக்கில் கொண்டு மதிப்பெண்கள் வழங்கினர்.

முதல் சுற்றில் தேர்வான 30 போட்டியாளர்கள் நேற்று, காலை 9 மணி அளவில் திருச்சி புதிய பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் உள்ள ஓட்டல் ஆக்சினா லைகோனில் நடைபெற்ற இறுதிகட்ட போட்டியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இறுதியில், கேக் பேக்கிங் பிரிவில் பிரம்மி டேவிட் மற்றும் கேக் அலங்கரிப்பது பிரிவில் கனிமொழி வெற்றி பெற்று திருச்சியின் புதிய பேக்கிங் ராணிகளாக மகுடம் சூட்டப்பட்டார்கள்.

வெற்றியாளர்களுக்கு, கண்கவரும் பரிசுகளோடு சான்றிதழ்களை, இவ்விழாவின் சிறப்பு விருந்தினர், பிரபல செப் தேவகி விஜயராமன் வழங்கினார். கேக் பீ நிறுவனத்தை சேர்ந்த பேஸ்ட்ரி செப், பார்வையாளர்களுக்கு கேக், பிஸ்கட் மற்றும் பல உணவு வகைகளை சுவைபட தயாரிக்கும் முறைகளை அரங்கத்தில் கற்றுத்தந்தார். ஹலோ எப்.எம். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நடத்திய வேறு சில போட்டிகளில், இந்நிகழ்விற்கு வந்திருந்த பார்வையாளர்கள் கலந்துகொண்டு பரிசு பெற்றதோடு கேக், பிஸ்கட் போன்ற உணவு வகைகளை சுவைபட தயார் செய்ய இந்நிகழ்ச்சி உறுதுணையாக இருந்தது என பாராட்டினர்.


Next Story