வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு
வடபொன்பரப்பியில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு
வடபொன்பரப்பி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மைக்கேல்புரத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் வீரன் தலைமை தாங்கி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பாதுகாப்பான பயணத்துக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது, மீறி வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுவதோடு பெற்றோருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
Related Tags :
Next Story