ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி


ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 26 Sep 2022 6:45 PM GMT (Updated: 26 Sep 2022 6:47 PM GMT)

விக்கிரவாண்டியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விழுப்புரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா தலைமை தாங்கி போதை பொருள், புகையிலை ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்று, பின்னர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்டவர்கள் வழிநெடுகிலும் ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு எற்படுத்தினர். விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தை சென்றடைந்தது. இதில் இளைஞர்கள் சங்கர், செல்வகுமார், சிவராஜ், போக்குவரத்து போலீஸ்காரர்கள் கலையரசன், நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story