"வேலூரில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்"


வேலூரில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்
x

வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

வேலூர்,

விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் எனவும் விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கவும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

விபத்திலா நகரை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களுக்கு வேலூர் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.


Next Story