குட்டிகளுடன் புகுந்த காட்டுயானை கூட்டம்


குட்டிகளுடன் புகுந்த காட்டுயானை கூட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் குட்டிகளுடன் காட்டுயானை கூட்டம் புகுந்தது. இதனால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோயம்புத்தூர்

வடவள்ளி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் குட்டிகளுடன் காட்டுயானை கூட்டம் புகுந்தது. இதனால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

காட்டுயானைகள் புகுந்தன

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு அங்கமான கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதன் பின்புறம் உள்ள வனப்பகுதியில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது அடிவார பகுதியில் முகாமிடுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய காட்டுயானை கூட்டம், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்தன. இதை கண்ட மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விரட்டியடிப்பு

மேலும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று, வனத்துறையினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், காட்டுயானை கூட்டம் மேற்கொண்டு பல்கலைக்கழகத்துக்குள் செல்லாத வகையில் தடுத்து துரத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது.

நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு காட்டுயானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. அவற்றை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். பின்னர் இரவில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் பகுதி வழியாக அட்டுக்கல் வனப்பகுதிக்கு காட்டுயானைகள் சென்றன.


Next Story