திருப்புவனம் கோர்ட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு


திருப்புவனம் கோர்ட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
x

திருப்புவனம் கோர்ட்டுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனத்தில் மாவட்ட உரிமைகள் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றம் குறுகிய இடத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதனால் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆதிகேசவலு, வடமலை ஆகியோர் திருப்புவனம் கோர்ட்டுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை பார்வையிட்டனர். மேலும் பூவந்தியிலும், டி.பாப்பாங்குளம் விலக்கு அருகே உள்ள இடம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் திருப்புவனம் கோர்ட்டு வளாகத்தையும் ஐகோர்ட்டு நீதிபதிகள் பார்வையிட்டனர். அப்போது திருப்புவனம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பூவந்தி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகள் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் உள்ள சிவகங்கைக்கு செல்கின்றன. அதை திருப்புவனத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். இதில் ஐகோர்ட்டு நீதிபதிகளுடன், மாவட்ட அமர்வு நீதிபதி, திருப்புவனம் கோர்ட்டு நீதிபதி, சிவகங்கை கோட்டாட்சியர், திருப்புவனம் தாசில்தார் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story